Categories
அரசியல் தேசிய செய்திகள்

எனக்கு அறிவுரை வழங்க முடியாது…நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக சபாநாயர் வழக்கு..!!

MLAக்கள் ராஜினாமா தொடர்பாக இன்றைக்குள்  நடவடிக்கை எடுக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் கூறியதை எதிர்த்து கர்நாடக சபாநாயகர் வழக்கு தொடுத்துள்ளார்.

கர்நாடக மாநில MLAக்கள் 14 பேர் அளித்த ராஜினாமா கடிதத்தில் 8 பேரின் கடிதங்கள் சட்ட விதிமுறைகளின் படி இல்லை என்றும், ராஜினாமா செய்ய விரும்பினால் முறைப்படி கடிதம் அளிக்கவேண்டும் என்றும் சபாநாயகர் தெரிவித்தார். இதையடுத்து MLAக்கள் 10 பேர் தொடர்ந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.

Image result for கர்நாடக சபாநாயகர்

இந்நிலையில் வழக்கை விசாரித்த நீதிபதிகள்,MLAக்கள் 10 பேரும் சாபநாயகர் முன்பு இன்று மாலை 6 மணிக்கு முன்பாக  ஆஜராக வேண்டும் என்றும்,MLAக்கள் ராஜினாமா தொடர்பாக இன்றைக்குள்   கர்நாடக சபாநாயகர் முடிவு எடுத்து நாளை காலை உச்ச நீதிமன்றத்தில் அறிக்கை  தாக்கல் செய்ய வேண்டும் என்றும்  நீதிபதிகள் உத்தரவிட்டனர்.இதை எதிர்த்து கர்நாடக சபாநாயகர் வழக்கு தொடர்ந்துள்ளார்.அதில்,சபாநாயக்கருக்கு எந்த அறிவுரையும் நீதிமன்றங்கள் வழங்க முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.இதையடுத்து சபாநாயகர் மனுவை நாளை விசாரிப்பதாக உச்சநீதிமன்ற நீதிபதிகள் அறிவித்துள்ளனர்.

 

 

Categories

Tech |