சினிமா நடிகரான மாரிமுத்து சன் டிவியில் ஒளிபரப்பாகும் ‘எதிர்நீச்சல்’ சீரியலின் மூலம் சின்னத்திரையில் என்ட்ரி கொடுத்துள்ளார். இவர் எமோஷனல், எதார்த்தமான நடிப்பு மற்றும் தந்திரமான வில்லன் போன்ற கதாபாத்திரங்களில் அசத்தலாக நடித்து வருகிறார்.
சீரியலில் எதற்கெடுத்தாலும் அழுது எமோஷனல் பிளாக்மெயில் செய்யும் இவருக்கு நிஜத்தில் அழவே தெரியாதாம். இது பற்றி இவர் பேட்டி ஒன்றில், என் அப்பா இறந்தபோது கூட என் மனதில் வருத்தம் இருந்தது.
ஆனால் அவருடைய வாழ்க்கை முடிந்தது. எல்லாரும் ஒரு நாள் போகத்தான் போறோம் என்ற உண்மையை புரிந்து கொண்டவன் நான். அதனால் எதற்கும் அழுகிறதே இல்லை. சீரியலில் கிளிசரினை பயன்படுத்தி தான் அழுகிறேன் என கூறியுள்ளார்.