கணவர் இறந்த சோகத்தில் குழந்தையுடன் மனைவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சிறுவங்கூர் கிராமத்தைச் சார்ந்தவர் தாமோதரன்-திவ்யா லக்ஷ்மி தம்பதியினர். இவர்களுக்கு நான்கு வயதில் சாலிக்கியா என்ற ஒரு மகள் இருந்தார். தாமோதரன் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் இறந்துவிட்டார். தாமோதரன் இறந்த மன வேதனையில் திவ்யா லக்ஷ்மி அடிக்கடி அழுது கொண்டே இருப்பார். இதனால் உறவினர்கள் அனைவரும் அவருக்கு ஆறுதல் கூறி வந்துள்ளனர்.
ஆனால் கணவரை மறக்க முடியாத காரணத்தினால் திவ்ய லட்சுமி தனது குழந்தையுடன் அந்த பகுதியில் உள்ள ஒரு கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். தாமோதரனின் தாயான லலிதா அவரை அக்கம் பக்கத்தில் தேடியுள்ளார். அந்த சமயத்தில் திவ்யலட்சுமி குழந்தையுடன் கிணற்றில் பிணமாக மிதந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து அழுதுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இருவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். திவ்யா லட்சுமி இறப்பதற்கு முன்பு அவரது வீட்டில் ஏற்கனவே ஒரு கடிதத்தை எழுதி வைத்துள்ளார். அதில் “என் சாவுக்கு யாரும் காரணம் இல்லை. என் கணவர் இல்லாத உலகத்தில் நான் வாழ விரும்பவில்லை” என்று அவர் எழுதியிருந்தார். காவல்துறையினர் இந்த கடிதத்தை கைப்பற்றி மேலும் விசாரணையை தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.