இங்கிலாந்து நாட்டின் வரலாற்றில் முதல் முறையாக இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக் பிரதமராக பதவியேற்றுள்ளார். இவருக்கு இந்திய நாட்டைச் சேர்ந்த பல பிரபலங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அதன் பிறகு இங்கிலாந்து நாட்டின் பிரதமராக ரிஷி சுனக் பதவி ஏற்றுக் கொண்டது அந்நாட்டில் ஒரு சிலருக்கு பிடிக்கவில்லை என்பதை தெரிகிறது. இவரைப் பற்றி டிவி நிகழ்ச்சியில் ஒருவர் கருப்பினத்தவர், வேறு நாட்டுக்காரர், அவரால் நம்முடைய பிரச்சனைகளை புரிந்து கொள்ள முடியாதென்று கூறியுள்ளார்.
இந்த வீடியோவை தி டெய்லி ஷோ என்ற நிகழ்ச்சியின் தொகுப்பாளர் பகிர்ந்துள்ளார். அதோடு ஒருவரின் கொள்கை மற்றும் திறமை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டுதான் ஒருவரின் மதிப்பை கணக்கிட வேண்டுமே தவிர நிறத்தை வைத்து மதிப்பிடக்கூடாது எனவும் கூறியுள்ளார். இந்த வீடியோவை தற்போது நடிகர் விக்ரம் தன்னுடைய twitter பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அதனுடன் இந்த வீடியோவை பார்த்ததிலிருந்து என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை. என்னை மன்னிக்கவும். இந்த வீடியோவை தற்போது நான் பகிர வேண்டும் என்று நினைத்தேன். இந்தியாவுக்கு பெருமை. முதல் தமிழ் இந்தியன் அமெரிக்காவின் துணை குடியரசு தலைவர் ஆனார். தற்போது இந்திய வம்சாவளியை சேர்ந்த ஒருவர் இங்கிலாந்து நாட்டின் பிரதமராக ஆகியுள்ளார். வா ராஜா வா என பதிவிட்டுள்ளார். மேலும் நடிகர் விக்ரமின் பதிவு தற்போது வைரலாகி வருகிறது.
இதை பார்த்தத்திலிருந்து என் சிரிப்பை அடக்கமுடியில்லை. 😉 Sorry but i have to share it. 🤣 Way to go India. 🇮🇳 First a தமிழ் Indian VP of the US. And now a British PM of Indian descent. வா ராஜா வா!! https://t.co/eGVnnT74OZ
— Vikram (@chiyaan) October 26, 2022