Categories
சினிமா தமிழ் சினிமா

என்னால் காத்திருக்க முடியாது…. பிரசாந்தை காணத்துடிக்கும் வனிதா…. வைரலாகும் பதிவு….!!!

நடிகர் பிரசாந்திற்காக காத்திருக்கும் நடிகை வனிதா பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த குக் வித் கோமாளி  நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் நடிகை வனிதா. இதை தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற இவர் அந்நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்ததிலிருந்து பல படங்களில் கமிட்டாகி பிஸியான நடிகையாக வலம் வருகிறார். அதன்படி 2கே அழகானது காதல், அந்தகன், அனல்காற்று, சிகப்பு மனிதன், பிக்கப் ட்ராப் உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இந்நிலையில் நடிகை வனிதா தற்போது நடிகர் பிரசாந்தின் போட்டோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து அதனுடன்,  ஹேண்ட்சம் அன்ட் ஹாட். அந்த நாட்களில் இருந்து எப்போதும் நான் உங்களின் பெரிய ரசிகை,  இன்னும் என்னால் காத்திருக்க முடியாது. அந்தகன் பேங் பேங் பேங், டப்பிங் மற்றும் பிரமிப்பு. நான் காத்திருக்கிறேன் பிரசாந்த். கம் பேக்கிற்காக உற்சாகத்துடன் காத்திருக்கிறேன். ராக் ஆன் என குறிப்பிட்டுள்ளார்.

Categories

Tech |