Categories
தேசிய செய்திகள்

“குடும்ப பாசம், உறவுகளை முற்றிலும் துறக்கிறேன்”…. என் வாழ்க்கையில் இனி துறவு மட்டுமே….. உமா பாரதி அறிவிப்பு…..!!!!!

தேசிய அளவிலான அரசியலில் பாஜகவின் எழுச்சியை தூண்டியவரும், ராமர் கோவில் இயக்கத்தின் மிக முக்கியமான தலைவராகவும், அரசியல்வாதியாகவும் இருப்பவர் உமா பாரதி. இவர் தற்போது டுவிட்டர் பதிவை வெளியிட்டுள்ளார். அதில் கடந்த 1992-ம் ஆண்டு நவம்பர் 17-ம் தேதி நான் தீட்சை வாங்கி சன்னியாசம் பெற்றேன். என்னுடைய குரு ஜெயின் முனி ஆச்சார்யா வித்யாசாகர் மகராஜ். இவருடைய அறிவுறுத்தலின் பேரில் நான் 30 வருடம் ஆன்மீகத்தில் இருந்ததன் காரணமாக என்னுடைய குடும்பம் வந்த பாசங்கள் போன்றவற்றை துறக்கிறேன்.

நான் முற்றிலுமாக துறவு மேற்கொண்டு சந்நியாசம் இருந்து நாட்டு மக்களுக்காக சேவை செய்யப் போகிறேன். நான் பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சியின் ஆட்சியின் போது பல்வேறு விதமான துன்புறுத்தல்களுக்கு ஆளானேன். மேலும் என்னுடைய அரசியல் வாழ்க்கையில் எனக்கு உறுதுணையாக இருந்த என்னுடைய குடும்பத்தினருக்கும், எனக்கு உயிர் கொடுத்த என்னுடைய பெற்றோருக்கும் நன்றி என்று பதிவிட்டுள்ளார்

Categories

Tech |