Categories
அரசியல் மாநில செய்திகள்

தொலைபேசியில் தொடர்பு கொண்டு நலம் விசாரித்தேன் – முக.ஸ்டாலின் ட்விட் …!!

உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு நலம் விசாரித்ததாக திமுக தலைவர் மு க ஸ்டாலின் ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார்.

உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி அன்பழகன் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருப்பதாக செய்தி வெளியான நிலையில், உடல் சோர்வு காரணமாகவே தான் சோதனை செய்து கொண்டதாக அவர் தெரிவித்தார்.கொரோனா இருப்பதை அவர் மறுத்திருக்கிறார், எனினு கொரோனாவால் பாதிக்கப் பட்டதாக தகவல் வெளியானதால் உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகனிடம் திமுக தலைவர் மு க ஸ்டாலின் நலம் விசாரித்து இருக்கிறார்.

இதுகுறித்து திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், உயர்கல்வித்துறை துறை அமைச்சர் கேபி அன்பழகன் கொரோனாவால் பாதிக்கப் பட்டிருப்பது அறிந்து தொலைபேசியில் தொடர்பு கொண்டு விசாரித்தேன். அவர் விரைவில் நலம் பெற்று மக்கள் பணியாற்ற வேண்டும். பொது வாழ்வில் இருப்பவர்கள் இன்னும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் எனவும் ஸ்டாலின் ட்விட்டரில் கருத்து பதிவிட்டுள்ளார்.

குறிப்பாக ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி யை தாண்டி ரசியல் நாகரீகம் கருதி பொதுவாழ்வில் இருக்கும் தலைவர்கள்  இது போன்று நலம் விசாரிப்பது சமூகத்தில் ஒரு நல்ல எடுத்துக்காட்டாக இருக்கும் என்று சொல்லப்படுகிற அந்த அடிப்படையில் ஸ்டாலின் செயல் அமைந்துள்ளது. இந்த ஏற்கனவே திமுக எம்எல்ஏ கொரோனாவுக்கு உயிரிழந்த நிலையில் ஸ்ரீபெரும்புதூர் எம்எல்ஏ கொரோனாவால்  பாதிக்கப்பட்ட நிலையில் அவர் விரைவில் நலம் பெற வேண்டும் என்று  ஸ்டாலின் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |