சென்னை புழல் பகுதி அருகே ஆவி சொன்னதால் ஒன்றரை வயது குழந்தையின் கழுத்தை அறுத்து கொன்றதாக கூறிய நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்
சென்னை புழல் பகுதியை அடுத்த ஜஸ்டின் புரத்தைச் சேர்ந்தவர் ஆகாஷ் ராஜ். இவர் நேற்றைய தினம் கஞ்சா போதையில் பக்கத்து வீட்டாருடன் வாய் தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்பொழுது ஒன்றரை வயது குழந்தை சாய்சரண் கழுத்தை கத்தியால் அறுத்துவிட்டு தப்பி ஓடியுள்ளான். இதையடுத்து தப்பி ஓடிய அவனை காவல்துறையினர் தேடி வந்த நிலையில், புழல் ஏரி கரை பகுதிகளில் வைத்து கைது செய்ய முயன்றனர்.
அப்பொழுது தப்பிக்க முயன்ற அவன் பாலத்தில் இருந்து தவறி விழுந்து கை எலும்பு முறிவு ஏற்பட்டு சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். விசாரணையில் மனநலம் பாதிக்கப்பட்டவன் போல முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார் ஆகாஷ்ராஜ். தான் கஞ்சா போதையில் இருந்ததாகவும், ஆவி சொன்னதால்தான் குழந்தையின் கழுத்தை அறுத்து கொன்றதாகவும் தெரிவித்துள்ளான். பின் அவனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். இதனிடையே கழுத்தறுக்கப்பட்ட குழந்தைக்கு அதே ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.