கோவையில் உள்ள கோட்டைமேடு ஈஸ்வரன் கோவிலில் தரிசனம் செய்த பின்னர் அண்ணாமலை அவர்கள் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பத்திரிக்கையாளர்களை பார்த்து குரங்கு என்று கொல்லப்பட்டதற்கு மன்னிப்பெல்லாம் கேட்க முடியாது என்று பாஜக மாநில தலைவர் பத்திரிகையாளரிடம் தெரிவித்ததால் சிறிது நேரம் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. குறிப்பிட்ட நோக்கத்தோடு வந்தவர்களை நான் விமர்சித்தேன். குரங்கு என்று சொல்லவில்லை, குரங்கு என்ற மாதிரி தான் சொன்னேன்.
குரங்கு என்று சொல்றதுக்கு மன்னிப்பு கேட்பீர்களா ? என்ற கேள்விக்கு, தவறு செய்யாதபோது நான் எதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும். மன்னிப்பு கேட்பது என்பது என் ரத்தத்திலேயே கிடையாது என்றும் தெரிவித்தார். என்னுடைய செய்தியை கவர் செய்வதும், செய்யாமல் இருப்பதும் உங்களுடைய விருப்பம் என்று தெரிவித்தார். அப்போது ஏன் செய்தியாளர்களுக்கு அழைப்பு விடுக்கின்றீர்கள் ? என்ற கேள்விக்கு நான் அழைக்கவில்லை என்று தெரிவித்தார்.
அண்ணாமலை தவறு செய்து விட்டதாக நீங்கள் நினைத்தால் என் செய்தியை தவிர்ப்பதற்கான உரிமை உங்களுக்கு உண்டு என்றும் செய்தியாளர்களிடம் அண்ணாமலை தெரிவித்தார். மேலும் பத்திரிகையாளர்களை பார்த்து 1000, 2000, 3000 என்று சொன்னது குறித்து அவரிடம் பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது அப்படி பணம் வாங்கும் பத்திரிகையாளரை அம்பலப்படுத்துவேன். அப்படி சொன்னதற்கான காரணத்தையும் வெளிப்படுத்துவேன் என்று தெரிவித்தார்.
அதை செய்வதில் யாருக்கும் எந்த பிரச்சனையும் இல்லை. பணம் வாங்கியவர்களை அம்பலப்படுத்த வேண்டியது தானே.. எல்லோரையும் ஏன் ஒரே மாதிரியாக பேசுகிறீர்கள் என்று தொடர்ந்து அண்ணாமலையிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்பொழுது அண்ணாமலையிடம் கேள்வி கேட்டதற்கு பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். தொடர்ந்து அண்ணாமலையிடம் செய்தியாளர்கள் அடுத்தடுத்த கேள்வி கேட்கவே அந்த பகுதி முழுவதுமே சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது.