நாமக்கல் மாவட்டத்தில் இரு தரப்பினரிடையே நடைபெற்ற தாக்குதலில் என்ஜினீயருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
நாமக்கல் மாவட்டம் ஓட்டமெத்தை பகுதியில் ராஜேஸ்வரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் ராஜேஸ்வரன் அவருக்கு சொந்தமான இடத்தில் கட்டிட வேலைகள் நடைபெற்று வருகின்றது. இதனையடுத்து அந்த இடம் தொடர்பாக ராஜேஸ்வரனுக்கும் அதே பகுதியை சேர்ந்த மோகன் என்பவருக்கும் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனைத்தொடர்ந்து அந்த இடத்தில கட்டிட வேலைக்காக பள்ளிபாளையம் வகுத்துள்ள புதன் சந்தையை சேர்ந்த சங்கர்(36) என்ற என்ஜினீயர் மற்றும் தொழிலாளர்கள் சென்றுள்ளனர். அப்போது மோகன், பிரவீன், கவின், பழனிசாமி , குழந்தைவேலு உட்பட சிலர் கட்டிட வேலை நடைபெறும் ராஜேஸ்வரன் இடத்திற்கு சென்று தகராறில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் அங்கிருந்த என்ஜினீயர் சங்கர் உள்பட தொழிலாளர்களை தாக்கியுள்ளனர். இருதரப்பினரிடையே நடைபெற்ற தாக்குதலில் சங்கருக்கு பலத்தகாயம் ஏற்பட்டுள்ளது. இதனைப்பார்த்த சக தொழிலாளர்கள் அவரை மீட்டு பள்ளிபாளையம் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதுகுறித்து சங்கர் பள்ளிபாளையம் காவல்நிலையத்தில் புகார் அளித்த நிலையில் மோகனின் உறவினர்களும் புகார் அளித்துள்ளனர்.அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து இந்த தாக்குதலில் ஈடுபட்ட பிரகாஷ், சந்திரசேகர், சம்பூரணி ஆகிய 3 பேரையும் கைது செய்ய நிலையில் மேலும் சிலரை தேடி வருகின்றனர்.