பல பெண்களை ஏமாற்றி மிரட்டி பணம் பரித்த நாகர்கோவில் இளைஞர் காசியின் மீது சென்னையை சேர்ந்த பெண் மருத்துவர் உட்பட இருவர் அளித்த புகாரின் பேரில் 3 வழக்குகளை பதிவு செய்த போலீசார் காசியை கைது செய்து சிறையில் அடைத்தனர். அதன்பின் காவலில் எடுத்து காசியைப் பற்றி போலீசார் மேற்கொண்டு வரும் தொடர் விசாரணையில் அவன் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களை மிரட்டி பணம் பறித்து சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்தது தெரியவந்தது.
இளம்பெண்களை மட்டுமின்றி அந்தப் பெண்களின் புகைப்படத்தை வைத்து அவர்களின் அம்மாக்களையும் அடிபணிய வைத்துள்ளான். அவனுக்கு பின்னால் கட்சி ஆதரவு இருப்பதாகவும் தீவிர விசாரணை நடத்தினால் விஐபிகளின் பிள்ளைகள் மற்றும் கட்சியின் பதவியில் உள்ள முக்கிய பிரமுகர்கள் சிக்குவார்கள் என்று கூறப்படுகிறது.
இதனைத்தொடர்ந்து, தற்போது டெஸ்ட் டியூப் குழந்தை மருத்துவத்தில் சிறப்பு வாய்ந்த பெண் மருத்துவர் ஒருவரும் காசியின் வலையில் விழுந்தார் என்பது தெரியவந்தது. அவர் காசியின் அழகு, பேச்சுத்திறமை இதெல்லாம் பார்த்து மயங்கி அவனிடம் நெருங்கி பழகியுள்ளார்.
காசியை பலமுறை ஸ்பெர்ம் டொனேட் செய்யமாறு உரிமையாக கேட்டுள்ளார். காசியும் பலமுறை அதன்படி ‘sperm donate’ செய்துஉள்ளான். அதற்கு ‘ஒரு முறை இந்தப் பெண் மருத்துவர் காசி எத்தனை பேர் வயிற்றில் உன் குழந்தை வளர்கிறது’ என்று சொல்லிஇருக்கிறார். அதனால் மகிழ்ச்சியின் உச்சத்திற்கே சென்றுள்ளான் காசி . பின்பு தனது நபர்களை இணைத்து வாட்ஸாஅப் குழு ஒன்றை உருவாகியுள்ளன.
அதற்கு பதிலாக காசி அழைத்து வரும் கருவுற்ற இளம் பெண்கள் கருவை கலைப்பதற்கு பெண் மருத்துவர் உதவி செய்து வந்துள்ளார். காசி பற்றி ஒவ்வொரு நாளும் பல தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளதால் அவனுக்கு உடனடியாக தண்டனை கொடுக்க வேண்டும் என பலரின் பொதுவான கருத்தாக உள்ளது.