Categories
சினிமா தமிழ் சினிமா

சிவகார்த்திகேயன் ”இப்படி சொல்லிட்டாரே ?” நொந்து போன லட்சுமி ராமகிருஷ்ணன் …!!

சிவகார்த்திகேயன் என்னையே யாரென்று தெரியாத மாதிரி பேசியது வருத்தத்தை அளித்தது என லட்சுமி ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 

கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் மக்கள் அனைவரும் வீட்டிலையே இருக்கும் சூழல் உருவாகியுள்ளது. சினிமா பிரபலங்களும் வீட்டிலேயே இருப்பதால் சமூகவலைத்தளங்களில் ஆக்டிவாக செயல்பட்டு வருகிறார்கள். அந்த வகையில் நடிகரும் இயக்குனருமான லட்சுமி ராமகிருஷ்ணன் சமீபத்தில் குரல் 786 எனும் படத்தின் டிரைலரை பகிர்ந்துள்ளார்.

இதனைக்கண்ட ரசிகர் ஒருவர் எப்போது இந்தப் குறும்படத்தை வெளியிடுகிறீர்கள் என்று கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு பதிலளித்த லட்சுமி ராமகிருஷ்ணன் அது குறும்படம் அல்ல அது சிவகார்த்திகேயனை வைத்து எடுக்க இருந்த முதல் படம். அவரை அறிமுகப்படுத்தி இருக்க வேண்டியது நான் தான். ஆனால் நான் அதனை கைவிட்ட பின்னரே சிவகார்த்திகேயன் மெரினா படத்தில் நடித்தார்.

குரல் 786 திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு சிறப்பான கதாபாத்திரம் ஆனால் அது இல்லாமலேயே வணிக தொடர்பாக சிறந்த முறையில் வெற்றி பெற்றுவிட்டார் என்று குறிப்பிட்டுள்ளார். மற்றொரு பதிவில் சிவகார்த்திகேயனின் வளர்ச்சியை பார்க்கும் பொழுது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.

அவர் தற்போது சிறந்த நிலையில் இருப்பதற்கு அவரது திறமை தான் மூலகாரணம். ஆனால் என்னை தெரியாததுபோல் பேசியது எனக்கு மிகுந்த வருத்தத்தை அளித்துள்ளது. குறள் 786 படத்தின்போது இரண்டு வருடங்கள் என்னுடன்தான் பயணித்தார். எனது குடும்ப உறுப்பினரைப் போன்றவர் தான் சிவகார்த்திகேயன் என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |