Categories
தேசிய செய்திகள்

“நான் உங்களை வீட்டில இறக்கி விடுகிறேன் சிஸ்டர்”… நம்பி சென்ற செவிலியரை நாசமாக்கிய கும்பல்…!!

அசாம் மாநிலத்தில் பணி முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த செவிலியரை மூன்று நபர்கள் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் கடந்த மாதம் முதலே கொரோனா தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. இது ஒருபுறமிருக்க மருத்துவமனைகளில் மருத்துவர்களும் செவிலியர்களும் நோயாளிகளை காப்பாற்றுவதற்கு அல்லும் பகலும் உழைத்து வருகின்றனர். அப்படிப்பட்ட செவிலியர்கள் மருத்துவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்குவது நமது கடமையாகும். ஆனால் அவர்களுக்கு பாதுகாப்பு என்பது தற்போது கேள்விக்குறியாக மாறியுள்ளது. அசாம் மாநிலத்தில் கச்சார் மாவட்டத்தை சேர்ந்த பெண் செவிலியர் ஒருவர் இரவு பணி முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த போது அந்த வழியாக வந்த இளைஞர்தான் வீட்டில் இறக்கி விட்டு விடுவதாக கூறி அந்த பெண்ணை அழைத்துள்ளார்.

முதலில் வர மறுத்து அவரை வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்று ஒரு விடுதியில் வைத்து தனது நண்பர்களுடன் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதையடுத்து பாதிக்கப்பட்ட பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் விசாரணை செய்த போலீசார் 3 பேரையும் கைது செய்தனர். ஆனால் அந்த செவிலியருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்ட காரணத்தினால் தான் வீட்டுக்கு சென்று தனிமைப்படுத்திக் கொள்ள இருந்ததாக கூறியிருந்தார். இதனால் அவர்களுக்கும் நோய் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்று குற்றவாளிகளை காவல்துறையினர் தனிமைப்படுத்தி உள்ளனர். இந்த சம்பவம் மூலம் அந்த செவிலியர் மனதளவில் மிகுந்த பாதிப்பை சந்தித்து உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். மக்களின் உயிரைக் காப்பாற்றுவதற்கு அல்லும் பகலும் பாடுபடும் முன்கள பணியாளர்களுக்கு அரசாங்கம் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.

Categories

Tech |