ஜெர்மனியின் ஏஞ்சலா மெர்கல் தான் தடுப்பூசி போட்டுக் கொள்ளப் போவதில்லை என்று உறுதியாக தெரிவித்துள்ளார்.
ஜெர்மன் சேன்ஸலரான ஏஞ்சலா மெர்கல் தான் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளப் போவதில்லை என்று உறுதியாக கூறியுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது, எனக்கு 66 வயதாகிறது. அதனால் நான் ஆக்ஸ்போர்ட் அஸ்ட்ராஜனதா தடுப்பூசியைப் போட்டுக் கொள்ளப் போவதில்லை. அரசின் விதி முறைப்படி 65 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு மட்டுமே தடுப்பு ஊசி செலுத்தப்படும் என்று கட்டுப்பாடுகள் உள்ளது.
அதனடிப்படையில் எனக்கு தற்போது 66 வயது ஆகிவிட்டதால் நான் தடுப்பூசி போட்டுக்கொள்ள தகுதியானவர் அல்ல. ஆகையால் நான் தடுப்பூசி போட்டுக் கொள்ளப் போவதில்லை என்று தெரிவித்தார். மேலும் ஜெர்மனில் பலர் தடுப்பூசி போட மறுத்து வருவதால், 1.2 மில்லியன் டோஸ் தடுப்பூசிகள் பயன்படுத்தப்படாமல் கிடங்குகளிலேயே வைக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.