Categories
அரசியல்

” நான் செல்லாத வீடே கிடையாது ” அதிமுக வெற்றிக் கூட்டணி…… O.P.S மகன் பேட்டி…!!

தேனி மாவட்டத்தில் நான் செல்லாத வீடே கிடையாது . அதிமுக 40 தொகுதிகளில் வெற்றி பெரும் வெற்றிக்கூட்டணி என்று O.P.S  மகன் ரவீந்திரநாத் தெரிவித்துள்ளார்.

இன்று அதிமுகவின் தலைமைக்கழகத்தில்  நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான நேர்காணல் நடைபெற்று வருகின்றது . இன்று மற்றும் நாளை நடைபெறும் இந்த நேர்காணலில் காலை மற்றும் மாலை என 39 தொகுதிகளுக்கான நேர்காணல் நடைபெறுகின்றது. ஏற்கனவே காலை நடைபெற்ற 10 பாராளுமன்ற தொகுதி நேர்காணல் முடிந்த நிலையில் மாலை  திண்டுக்கல் , விருதுநகர் , மதுரை ,  தேனி , சிவகங்கை , ராமநாதபுரம் ,  தூத்துக்குடி,  சிவகாசி திருநெல்வேலி மற்றும்  கன்னியாகுமரி ஆகிய பத்து தொகுதிகளுக்கு நேர்காணல் நடைபெறுகின்றது.

 

 

இதில் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செலவத்தின் மகன் ரவீந்திரநாத் பங்கேற்றார் . இவர் தனது விருப்ப மனுவை தேனி மற்றும் விருதுநகர் பாராளுமன்ற தொகுதி_க்கு போட்டியிட அளித்துள்ளார்.இந்நிலையில் நேர்காணல் முடிந்து வெளியே செய்தியாளர்களிடம் பேசிய அவர் ,  நேர்காணலில் கட்சி பணியில் உள்ள  செயல்பாடுகள் , அனுபவம் குறித்து அனைத்து விவரங்களையும் கேட்டார்கள் . நான்  18 வயதிலிருந்து கட்சியின் வேலைகள் பார்த்துக் கொண்டிருக்கின்றேன் . 21 வருடங்களாக ஒவ்வொரு கிராமங்களிலும் , ஒவ்வொரு நகரத்திலும் ஒவ்வொரு தெருக்களிலும் சென்று கட்சி பணியை மேற்கொண்டேன் . தேனி மாவட்டத்தில் நான் செல்லாத வீடுகளே கிடையாது , அந்த அளவுக்கு படிப்படியாக முன்னேறி இந்த அளவுக்கு வந்துள்ளேன் . திறமையும் கட்சிக்கு உண்மையான விசுவாசமும் இருக்க வேண்டும் .  தமிழகம் முழுவதும் நாற்பதுக்கு நாற்பது தொகுதியில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கூட்டணி வெற்றிக் கூட்டணி வெற்றி பெறும் என்று அவர் தெரிவித்தார்.

Categories

Tech |