நாளை எனக்கு ஏதேனும் நிகழ்ந்தால் கூட இந்த அவை எனக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்ற வேண்டாம் என்று மைத்ரேயன் MP உருக்கமாக பேசியுள்ளார்.
பாராளுமன்றத்தில் உள்ள மாநிலங்களவையின் தமிழக MP_க்கள் ரத்தினவேல், கனிமொழி, மைத்ரேயன், டி.ராஜா, கே.பி.அர்ஜுனன். ஆர்.லட்சுமணன் ஆகிய 6 பேரின் பதவிக்காலம் வருகின்ற ஜூலை 24-ம் தேதியுடன் முடிவடைகின்றது. இந்நிலையில் ஓய்வு பெற இருக்கும் நிலையில் இன்றைய மாநிலங்களவையில் மைத்ரேயன் எம்.பி. உருக்கமாக பேசினார்.
அப்போது அவர் கூறுகையில் , இந்த நேரத்தில், என் மீது மிகுந்த நம்பிக்கை வைத்து , 3 முறை மாநிலங்கவைக்கு அனுப்பி வைத்த அன்பான தலைவரான அம்மா_வுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.ஏறத்தாழ 14 ஆண்டுகளாக நாடாளுமன்ற உறுப்பினராக பணிபுரிந்த எனக்கு தற்போது சூரியன் அஸ்தமிக்கும் நேரம் வந்து விட்டது. நாளை எனக்கு ஏதேனும் நிகழ்ந்தால் கூட எனக்கு இந்த அவை இரங்கல் தீர்மானம் நிறைவேற்ற வேண்டாம் என்று மிக உருக்கமாக பேசினார்.