Categories
சினிமா தமிழ் சினிமா

இதை எப்படி சொல்றதுன்னே தெரில…… ”வலிமை” குறித்து புகழ் நெகிழ்ச்சி……!!!!

வலிமை படம் குறித்து புகழ் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்கள் ஒருவராக வலம் வருபவர் நடிகர் அஜித். இயக்குனர் வினோத் இயக்கத்தில் இவர் நடித்துள்ள திரைப்படம் ”வலிமை”. போனி கபூர் தயாரித்துள்ள இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இதனையடுத்து, இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸாக உள்ளது.

அஜித்துடன் குக் வித் கோமாளி புகழ்.. வலிமை டிரைலரில் இருந்து வெளிவந்த காட்சி  - சினிஉலகம்

சமீபத்தில், இந்த படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த ட்ரைலரில் குக் வித் கோமாளி புகழ் ஒரு சீனில் இருந்திருப்பார். இந்நிலையில், புகழ் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அஜித்துடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை பதிவிட்டு, ”அஜித் சார் இந்த சந்தோஷத்தை எப்படி வெளிப்படுத்தறதுனு எனக்கு தெரியல. உங்க கூட பயணிக்கிற இந்த வாய்ப்பு அளித்த அனைவருக்கும் நன்றிகள்!”என நெகிழ்ச்சி பதிவிட்டுள்ளார்.

https://www.instagram.com/p/CYNyzcyPubc/?utm_source=ig_embed&ig_rid=12249142-cbe7-4a32-8ac7-17db2e919242

Categories

Tech |