Categories
லைப் ஸ்டைல்

அட இது தெரியாம போச்சே…. பொடுகு, முடி உதிர்வுக்கு…. இது நிரந்தர தீர்வு கொடுக்கும்…!!

முடி உதிர்தலை கட்டுப்படுத்த உதவும் சில எளிய டிப்ஸ்களை இங்கே பார்க்கலாம்.

நமது வாழ்க்கை முறை பல அம்சங்களை கொண்டு உள்ளது. நாம் சாப்பிடும் உணவுகள் நம் தலைமுடியை எவ்வாறு பாதுகாக்கும். அதே நேரத்தில், நாம் சாப்பிடும் உணவுகளால் நம் தலை முடியின் வளர்ச்சியை எவ்வாறு அதிகப்படுத்தலாம் என்பதை யோசிக்க வேண்டும். ஒரு சில முடி இழைகளை இழப்பது என்பது சாதாரணமாகக் கருதப்பட்டாலும், நீங்கள் ஏராளமான முடிகளை அதும் அவை கொத்து கொத்தாக உதிரத் தொடங்கும்போதுதான் நமது கவனம் முழுவதும் நமது முடி வளர்ச்சியை பற்றி சிந்திக்க தொடங்குவோம்.

முடி உதிர்தலை கட்டுப்படுத்த உதவும் டிப்ஸ்:

மணம் அல்லது பராபென் இல்லாத லேசான ஷாம்பூவைப் பயன்படுத்துங்கள்

ஷாம்புக்குப் பிறகு, உங்கள் தலைமுடியில் கண்டிஷனரை பயன்பபடுத்தலாம்.

அடிக்கடி முடியை நேராக்குவது அல்லது ஹேர் டிரையர் பயன்படுத்துவதை   தவிர்க்கவும்.

கூந்தல் உதிர்வுக்கு பலவிதமான காரணங்கள் இருக்கும். உரிய பராமரிப்பு இல்லாமல் அழுக்கு படர்ந்து. பிசுபிசுப்பு, பொடுகு போன்றவையும் இருக்கலாம். உடலில் சத்துகள் குறைந்தாலும் முடிக்கு வேண்டிய ஊட்டச்சத்து கிடைக்காமல் முடிஉதிர்தலுக்கு வழிவகுக்கும்.

முன்பு கூந்தல் வலுவாக்கும் கூந்தல் எண்ணெய் தயாரிப்புகளை வீட்டிலேயே பயன்படுத்தினார்கள். அப்படி அவர்கள் பயன்படுத்திய பொருள்களில் முக்கியமானது கருஞ்சீரகமும், வெந்தயமும் இதை கொண்டு எண்ணெய் தயாரித்து பயன்படுத்தினால் முடி உதிர்வு கட்டுக்குள் வரும்.

கொய்யா இலையில் உள்ள விட்டமின் சி முடியை வேகமாகவும், அடர்த்தியாகவும் வளர வைக்கும். இதில் விட்டமின் சி, மற்றும்  விட்டமின் பி அதிகளவில் உள்ளது.
கொய்யா இலைகளில் பாக்டீரியாக்கள் மற்றும் வைரஸ்களை எதிர்க்க கூடிய ஆற்றல் இருப்பதால், இது முடியின் ஆரோக்கியத்திற்கும், பொடுகுத்தொல்லையை போக்குவதற்கும் தீர்வாக உள்ளது.

இந்த கொய்ய இலை சாறை தலையில் தடவி மசாஜ் செய்வதால், இரத்த ஓட்டம் அதிகரிக்கிறது. இது முடியின் வேர்க்கால்களுக்கு  சத்துக்களை கொண்டு சேர்க்கும் தன்மை கொண்டது. முடியை ஆரோக்கியமாகவும் வளர செய்யக்கூடியது.

Categories

Tech |