Categories
உலக செய்திகள்

“நான் ஐபோனை பயன்படுத்துவதில்லை”…பில்கேட்ஸின் வெளிப்படையான பேச்சு… வியப்பூட்டும் தகவல்…!

உலகின் நம்பர்-1 பணக்காரராக இருந்த பில்கேட்ஸ் தான் ஐபோனை பயன்படுத்துவதில்லை என்ற வியப்பூட்டும் தகவலை தெரிவித்துள்ளார்.

உலகின் மிகப் பெரும் பணக்காரர்களாக இருப்பவர்கள் தங்களின் அன்றாடத் தேவைகளுக்காக ஐபோன்களை பயன்படுத்துகின்றனர். அப்படி 1 பில்லியன் பேர் ஐபோனை பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் உலக பணக்காரர்கள் பட்டியல் முதல் இடத்தில் இருந்த பில்கேட்ஸ் தான் ஐபோனை பயன்படுத்துவதில்லை என்ற தகவலை தெரிவித்துள்ளது அனைவருக்கும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில் நடந்த கிளப் ஹவுஸ் எனும் செயலியின் நேர்காணலில் பங்கேற்ற பில்கேட்ஸ் தன்னைப் பற்றிய இந்த தகவலை தெரிவித்தார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது, “நான் ஐபோன்களை பயன்படுத்துவதில்லை. என்னுடைய அன்றாட தேவைகளுக்காக ஆண்ட்ராய்டு போன்களை தான் பயன்படுத்தி வருகிறேன்.

ஐபோன்களை பயன்படுத்துவது சிறிது கடினமாக இருக்கும். ஆனால் ஆண்ட்ராய்டு போன்களை இயக்குவது மிகவும் எளிமையானது. என்னுடைய நண்பர்கள் பல பேர்  ஐபோன்களை பயன்படுத்துகின்றனர். ஆனால் அதில் தூய்மை இல்லை. மேலும் தன்னுடைய மைக்ரோசாஃப்ட் மென்பொருள்களை எளிதாக ஆப்பரேட் செய்வதற்கு ஆண்ட்ராய்ட் மொபைல் தான் காரணம் என்று கூறியுள்ளார்”.

Categories

Tech |