பிரபல நடிகை ஜோதிகா அட்வைஸ் செய்யும் கதாபாத்திரத்தில் நடிக்க விரும்பவில்லை என்று கூறியுள்ளார்.
பிரபல நடிகை ஜோதிகா, சசிகுமார், சமுத்திரகனி, சூரி ஆகியோருடன் இணைந்து பா.சரவணன் இயக்கத்தில் ‘உடன்பிறப்பே’ எனும் திரைப்படத்தில் நடித்துள்ளார். ஜோதிகாவின் 50வது படமான இது அமேசான் ஓடிடி தளத்தில் இன்று வெளியாகிறது. இந்நிலையில் இப்படத்தை விளம்பரப்படுத்த நடிகை ஜோதிகா இணையம் வழியே பேட்டி அளித்த போது அவரிடம் சில கேள்விகள் கேட்கப்பட்டுள்ளது.
அப்போது அவர் கூறியதாவது, நான் ஒரு படத்தினை தேர்வு செய்யும் போது என் மனதில் குழந்தைகளை வைத்துக் கொள்கிறேன். அவர்களுக்கு தான் நான் முன்னுரிமை கொடுப்பேன். எப்போதும் அட்வைஸ் செய்யும் கதாபாத்திரத்தில் நடிக்க நான் விரும்பவில்லை என்றும் கூறியுள்ளார்.