Categories
தேசிய செய்திகள்

எனக்கு சப்பாத்தி வேண்டாம்… வெஜ் சாலட் தான் வேண்டும்… மறுத்த மனைவியை வெட்டிக் கொன்ற கணவன்… அதிர்ச்சி சம்பவம்..!!

தனக்குப் பிடித்த உணவை மனைவி சமத்து தராத காரணத்தினால் அவரை கணவன் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம், ஷாம்லியில் கோகவன் ஜலல்பூரில் என்ற பகுதியில் வசித்து வருபவர் முர்லி. இவரது மனைவி சுதேசி, இவர்களுக்கு 20 வயதில் ஒரு மகன் உள்ளார். கடந்த வாரம் முர்லி சாப்பிடுவதற்காக வந்து அமர்ந்துள்ளார். அப்போது அவரது மனைவி சப்பாத்தி செய்து கொண்டு வந்து வைத்துள்ளார். இது தனக்கு வேண்டாம் என்றும், எனக்கு வெஜ் சாலட் வேண்டும் என்றும் அவர் மனைவிடம் கேட்டுள்ளார். அதற்கு மனைவி இல்லை தனக்கு வேறு வேலைகள் உள்ளது என்று கூறிவிட்டு சென்றுவிட்டார்.

இதனால் ஆத்திரமடைந்த கணவன் வெளியில் இருந்த மண்வெட்டியை எடுத்து வந்து மனைவியை வெட்டியுள்ளார். இதை தடுக்க சென்ற தனது 20 வயது மகனையும் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் அவர்கள் இருவரையும் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் மனைவி சுதேசி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மகனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தலைமறைவாக இருக்கும் முர்லியை தேடி வருகின்றனர்.

Categories

Tech |