இந்தியா – சீனா வீரர்கள் இடையே லடாக் பகுதியில் மோதல் தொடர்பாக பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று மீண்டும் ஆலோசனை மேற்கொண்டார்.
ஏற்கனவே நேற்று பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆலோசனை நடத்திய நிலையில் தற்போது முப்படை ராணுவ தளபதி பிபின் ராவத், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், முப்படை தளபதிகள் பங்கேற்றிருக்கிறார்கள். சீனா நடத்திய தாக்குதலில் மேலும் நான்கு வீரர்கள் கவலைக்கிடமாக இருக்கும் நிலையில் ராஜ்நாத் சிங் மீண்டும் ஆலோசனையில் ஈடுபட்டு இருக்கும் நிலையில் இந்த ஆலோசனை முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகின்றது.
20 வீரர்கள் வீர மரணம் அடைந்த நிலையில் தற்போது நடைபெற்ற இந்த கூட்டத்தில் இந்தியாவின் முப்படைகளும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வலியுறுத்தி இருக்கிறார். உடனடியாக என்னென்ன நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமோ அதையெல்லாம் எடுக்கப்படும் என ராணுவ அதிகாரிகள் உறுதியளித்திருக்கிறார். இந்தியா – சீனா எல்லை என்பது 4,000 கிலோ மீட்டருக்கு மேல் இருக்கிறது. இதனால் மற்ற இடங்களிலும் பிரச்சினையை உண்டாக்க சீனா முயற்சி செய்யலாம் என்பதால் எல்லை பகுதியில் ராணுவம் தீவிர கண்காணிப்பில் இருக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.