நடிகர் அஜித் குறித்து எழுந்த தகவல்கள் பொய் என்று அறிக்கை வெளியாகியுள்ளது.
கடந்த 6ஆம் தேதி நடிகர் அஜித் வெளியிட்டதாக கடிதம் ஒன்று சமூக வலைதளங்களில் பரவியது. அதில் சமூக ஊடகங்களில் மீண்டும் சேர முடிவு செய்துள்ளதாகவும், அதிகாரப்பூர்வ கணக்கு வைத்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார். ஆனால் இந்த கடிதம் போலியானது என்று நடிகர் அஜித் தரப்பில் இருந்து மறுப்பு அறிக்கை வந்துள்ளது. மேலும் இந்த கடிதத்தை வெளியிட்டவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நடிகர் அஜித்தின் அறிவுறுத்தலில் பரத் என்பவரின் பெயரில் வெளிவந்துள்ள அந்த அறிக்கையில் அஜித் குமார் அவர்களின் பெயரில் போலியான தலைப்பில் அச்சிடப்பட்டுள்ள கடிதத்த்தில் அஜித் படத்தை இணைத்து இருப்பதை பார்க்கும் போது அதிர்ச்சி அளிக்கிறது.அஜித்குமார் எந்த கடிதத்தையும் வெளியிடவில்லை. அந்த கடிதத்தில் தெரிவித்த கருத்துக்கள் அனைத்தும் பொய்யானவை. அஜித் அண்மையில் வெளியிட்ட அறிவிப்பில் தனக்கு எந்த ஒரு சமூக ஊடக கணக்கும் இல்லை, சமூக ஊடகங்களில் எந்த ஒரு அதிகாரப்பூர்வ ரசிகர் பக்கத்தையும் கொண்டிருக்கவில்லை அல்லது ஆதரிக்கவில்லை என்று பலமுறை தெரிவித்துள்ளார்.
அஜித்குமார் கீழ்க்கண்டவற்றை மீண்டும் வலியுறுத்த விரும்புகிறார்.
அவருக்கு அதிகாரப்பூர்வ ஊடக கணக்குகள் ஏதுமில்லை
அவர் எந்த சமூக ஊடகங்களிலும் இணைய விரும்பவில்லை
சமூக ஊடகங்களில் எந்த ஒரு கருத்தையும் மற்றும் எந்த ஒரு ரசிகர் பக்கத்தையும், குழுவையும் அவர் ஆதரிக்கவில்லை
மீண்டும் சமூக ஊடகங்களில் சேரப் போவதாக கூறி வந்த இந்த போலி கடிதத்தை அவர் வெளியிடவில்லை என்று தெரிவிக்கப்படுள்ளது. இந்த கடிதம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.