நகைச்சுவை நடிகர் அப்புகுட்டி கொரோனாவை எப்படி சமாளிக்க போகிறேன் என்று தெரியாமல் வருத்தப்படுவதாக கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவில் வெளியான ‘வெண்ணிலா கபடிக்குழு’ திரைப்படத்தின் மூலம் நகைச்சுவை நடிகராக அறிமுகமானவர் அப்புகுட்டி. இதை தொடர்ந்து இவர் நடித்த ‘அழகர்சாமியின் குதிரை’ திரைப்படம் தேசிய விருதை வென்றது. இதனால் அப்புக்குட்டிக்கு நிறைய பட வாய்ப்புகள் குவியும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவரது ஆசை நிறைவேறவில்லை.
நடிகர் அப்புக்குட்டி தற்போது கோவூரில் வாடகை வீட்டில் ஒன்றில் வசித்து வருகிறார். இந்நிலையில் நடிகர் அப்புக்குட்டி சொந்தமாக வீடு வாங்கும் அளவுக்கு கையில் பணம் இல்லை என்று கூறியுள்ளார். மேலும் கொரோனாவின் முதல் அலை வீசிய போது மிகவும் கஷ்டப் பட்டதாகவும், தற்போது வீசி வரும் இரண்டாம் அலையை எப்படி சமாளிக்கப் போகிறேன் என்றும் தெரியவில்லை என்று வருத்தத்துடன் கூறியுள்ளார்.