Categories
அரசியல் மாநில செய்திகள்

பேச தெரில…. ஆள தெரியாது என… சரமாரி கேள்வி… நச்சுன்னு செஞ்சு காட்டிய C.M ஸ்டாலின்!!

திமுகவின் மறைந்த தலைவர் இனமான பேராசிரியர் நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய கட்சியின் பேச்சளார் தமிழன் பிரசன்னா, பேராசிரியர் இந்த இயக்கத்தை ஆரம்பித்தார். கலைஞர் இந்த இயக்கத்தை வழி நடத்தினார். அவருக்கு பிறகு இந்த இயக்கத்தை யார் வழி நடத்துகிறார் ? என்று அடையாளப்படுத்திக் கொண்ட பொழுது, கலைஞரை நான் ஏற்றுக்கொண்டேன் என பேராசிரியர் பேசியது,  2005 மே மாதம் 12ஆம் தேதி ஓரிடத்தில் பேசி பேசி முடித்தார்.

அந்த பேச்சின் இறுதி தொகுப்பில் பேராசிரியர் சொல்கிறார்…. எனக்கு வயது ஆகிறது, தலைவர் கலைஞருக்கும்  வயதாகிறது. வயதாகிக் கொண்டே இருக்கிறது. எங்களுக்கு பின்னால் இந்த இயக்கத்தை யார் வழி நடத்துவார்கள் என்ற விவாதம் வரலாம். ஆனால் ஏறக்குறைய 40 ஆண்டுகாலம் இந்த இயக்கத்தின் பொதுச் செயலாளராக சொல்கிறேன்…

கலைஞருக்கு பிறகும், எனக்கு பிறகும் இந்த இயக்கத்தை வழி நடத்துவதற்கு ஒரே ஒரு தகுதி உள்ள ஆள் யார் என்றால் ? அது என் தம்பி மு.க ஸ்டாலின் தான் என்று அன்றைக்கே வழிநடத்தினார். அவர் ஒரு சித்தர். அவர் சொன்ன வாக்கு அப்படியே பலித்திருக்கின்றது.

இன்னைக்கு தமிழகம் தன்மானம் பெற்றிருக்கிறது, தமிழகம் உயர்ந்து நிற்கிறது. ஏன் ? இவருக்கு பேச தெரியாது, இவருக்கு ஆள தெரியாது. இவருக்கு எதுவுமே தெரியாது என்று சொன்னார். ஆனால் ஆட்சிக்கு வந்த ஓராண்டில் 17வது இடத்தில் இருந்த தமிழ்நாடு நக்கி பிழைக்கின்ற இந்த எடப்பாடி பழனிச்சாமி கும்பல்களால்….  இந்த நாடு நாசப்பட்ட போது… இந்த நாடு 17ஆவது இடத்தில் இருந்தது. ஆனால் இன்றைக்கு இந்தியாவிலேயே தமிழ்நாடு முதல் மாநிலமாக உயர்ந்து உயர்வு பெற்று இருக்கிறது என பெருமைப்பட தெரிவித்தார்.

Categories

Tech |