Categories
உலக செய்திகள்

11மாசம் நடந்தது எதுவுமே தெரியாதே… நாங்க எப்படி புரிய வைக்க போறோமோ… குழப்பத்தில் குடும்பத்தினர்…!

பிரிட்டனில் 11 மாதங்களாக கோமாவில் இருந்த இளைஞன் கண்விழித்தது குடும்பத்தினருக்கு மகிழ்ச்சியாக இருந்தாலும் அவர்களுக்கு வேறொரு குழப்பம் ஏற்பட்டுள்ளது.

பிரிட்டனில் 19 வயதுடைய ஜோசப் ஃபிளாவில் என்ற இளைஞர் கடந்த மார்ச் 1ஆம் தேதி வாகன விபத்தில் சிக்கினார். அதில் அவர் பலத்த காயமடைந்து கோமா நிலைக்கு சென்றார்.அதன் பின் சுமார் மூன்று வாரங்களுக்குப் பின் கொரோனா ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. கோமாவில் இருந்த ஜோசப்பிற்கும் இரண்டு முறை கொரோனா தொற்று ஏற்பட்டது. அதிலிருந்து அவர் மீண்டு வந்தார். இந்நிலையில் கிட்டத்தட்ட 11 மாதகாலம் கோமாவில் இருந்த ஜோசப் தற்போது கண் விழித்துள்ளார்.

அவர் கண் விழித்தது குடும்பத்தினருக்கு ஒரு பக்கம் சந்தோஷமாக இருந்தாலும், கடந்த 11 மாதங்களாக உலகமெங்கும் ஆட்டிப்படைத்த கொரானாவின் தாக்கம் எதுவும் தெரியாத ஜோசப்பிற்கு தாங்கள் எப்படி புரிய வைப்போம் என்ற குழப்பத்தில் இருந்தனர். மேலும் மருத்துவர்களின் கடும் முயற்சியால் தான் ஜோசப் உயிர் பிழைத்துள்ளார்.ஆகையால் மருத்துவர்களுக்கும், செவிலியர்களுக்கும் தங்களது மனமார்ந்த நன்றி என்று குடும்பத்தினர் தெரிவித்தனர்.

Categories

Tech |