Categories
சினிமா தமிழ் சினிமா

என்ன ஆச்சுன்னே தெரியலையே… சித்தார்த்துக்கு திடீர் அறுவை சிகிச்சை… இயக்குனர் சொன்ன தகவல்…!!!

பிரபல நடிகர் சித்தார்த்திற்கு திடீரென அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் சாக்லேட் பாயாக வலம் வந்த நடிகர் சித்தார்த் தற்போது பல படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து தனக்கான இமேஜை உயர்த்தியுள்ளார். இதை தவிர அவர் சமூக வலைதள பக்கங்களில் வாயிலாக தனது மனதில் பட்டதை பேசி பல பிரச்சினைகளையும் சந்தித்து வருகிறார். இதற்கிடையில் அவர் நடிப்பில் தற்போது மகா சங்கமம் என்ற திரைப்படம் உருவாகியுள்ளது.

வரும் அக்டோபர் 14-ஆம் தேதி வெளியாகும் இப்படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றுள்ளது. இந்நிகழ்ச்சியில் பேசிய இப்படத்தின் இயக்குனர் அஜய் பூபதி, நடிகர் சித்தார்த்திற்கு லண்டனில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாகவும், ஆகையால் தான் அவரால் இந்நிகழ்ச்சிக்கு வர முடியாமல் போனாதாகவும் கூறியுள்ளார். ஆனால் சித்தார்த்திற்கு எதற்காக அறுவை சிகிச்சை செய்துள்ளனர் என்ற தகவல் இதுவரை வெளியாகவில்லை.

Categories

Tech |