கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக இந்தியா முழுவதும் மே 3ஆம் தேதிவரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் இந்த மாதம் ஏப்ரல் 15ஆம் தேதி தொடங்குவதாக இருந்த ஐபிஎல் தொடரும் ரசிகர்களின் பாதுகாப்பு காரணங்கள் கருதி காலவரையறையின்றி ஒத்திவைக்கப்படுவதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. இதனால் போட்டியின்றி இருக்கும் விளையாட்டு வீரர்கள் தங்களது சமூக வலைதளங்களில் ஏதாவது வீடியோ வெளியிட்டு ரசிகர்களை மகிழ்வித்து வருகின்றனர்..
இந்நிலையில் இன்ஸ்டாகிராம் நேரலையில் பங்கேற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரரும், வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஆல்-ரவுண்டருமான டுவைன் பிராவோ, சென்னை அணியை போல எனக்கு வேறு எந்த அணியின் மீதும் ஈர்ப்பு இருந்தது கிடையாது எனக் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து பிராவோ பேசியதாவது, “சி.எஸ்.கே அணியில் எந்த வீரர் இணைந்தாலும் சரி அது அவருக்கு ஒரு புத்துணர்ச்சியை அளிக்கும் விதமாக இருக்கும். மேலும் அவர்கள் உங்களை ஒரு குடும்ப உறுப்பினரைப் போலவே வரவேற்பார்கள். மேலும் நான் உலகின் நிறைய அணிகளில் விளையாடி இருக்கிறேன். ஆனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியைப் போன்று எந்த ஒரு அணியும் என்னை இப்படி ஈர்த்தது கிடையாது.
"I don't think you can get another team or environment like the Chennai Super Kings!" Kanle Thanni stuff from #Champion @DJBravo47 #AnbuDenLions @RuphaRamani 🦁💛 pic.twitter.com/44faKCj39J
— Chennai Super Kings (@ChennaiIPL) April 28, 2020