Categories
சினிமா தமிழ் சினிமா

“எனக்கு விவாகரத்து செய்வதில் விருப்பமில்லை” பார்த்தவுடன் அப்படி தோன்ற வேண்டும்…… திருமணம் குறித்து மனம் திறந்த திரிஷா….!!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகை ஆக வலம் வருபவர் திரிஷா. இவர் ரஜினிகாந்த், கமல்ஹாசன், சூர்யா, விஜய், அஜித், விக்ரம் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து நடித்துள்ளார். நடிகை திரிஷா நடித்த பொன்னியின் செல்வன் திரைப்படம் சமீபத்தில் வெளியாகி அமோக வரவேற்பை பெற்றுள்ளது.

இப்படத்தில் நடிகை திரிஷா குந்தவை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். திரிஷாவின் சினிமா பயணத்தில் பொன்னியின் செல்வன் திரைப்படம் தான் மிகவும் பெஸ்ட் ஆனது என பலரும் பாராட்டி தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது 39 வயதாகும் நடிகை திரிஷா தன்னுடைய திருமணம் குறித்து முதன்முதலாக மனம் திறந்து பேசியுள்ளார்.

அவர் கூறியதாவது, எனக்கு எப்போது திருமணம் நடக்கும் என்பது தெரியாது. ஒருவரை பார்த்தவுடன் அவர் நம் வாழ்நாள் முழுவதும் இருப்பார் என்ற எண்ணம் தோன்ற வேண்டும். எனக்கு திருமணம் செய்துவிட்டு விவாகரத்து செய்வதில் உடன்பாடு கிடையாது என்று கூறியுள்ளார். மேலும் நடிகை திரிஷா தெலுங்கு நடிகர் ராணா டகுபதியை காதலித்து அந்த காதல் பிரேக்கப் ஆன நிலையில், பிரபல தயாரிப்பாளர் வருண் மணியனுடன் நிச்சயதார்த்தம் நடைபெற்று திருமணம் கைகூடாமல் பாதியிலேயே நின்றது என்பது குறிப்பிடத்தக்க தாகும்.

Categories

Tech |