‘டாக்டர்’ படத்தின் அப்டேட் குறித்து எதுவும் பேச விரும்பவில்லை என்று தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.
நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘டாக்டர்’. இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரியங்கா அருள்மோகன் நடித்துள்ளார். டாக்டர் திரைப்படத்தை வரும் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு வெளியிட படக்குழு திட்டமிட்டிருந்தது.தற்போது தமிழகம் முழுவதும் கொரோனா தொற்றின் பரவல் அதிகரித்திருப்பதால், ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு திரையரங்குகள் மூடப்பட்டுள்ளது.
இதையடுத்து டாக்டர் திரைப்படம் ஓடிடியில் ரிலீஸ் ஆகிறது என்று சமூக வலைத்தளங்களில் செய்தி பரவி வருகிறது. இதனால் ரசிகர்கள் பலரும் டாக்டர் திரைப்படம் எப்போது, எதில் ரிலீஸாகும் என்று கேட்டு வருகின்றனர்.இந்நிலையில் டாக்டர் படத்தின் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “டாக்டர் பட அப்டேட்டை வெளியிடக்கூறி ரசிகர்கள் பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
கொரோனாவின் இரண்டாம் அலையால் நாம் நம் நண்பர்கள் உறவினர்கள் என பலரை இழந்து வருகிறோம். இதுபோன்ற ஒரு சூழலில் டாக்டர் படத்தின் ரிலீஸ் தேதி குறித்து நாங்கள் எதுவும் பேச விரும்பவில்லை. தயவு செய்து அனைவரும் கொரோனா விதிமுறைகளை பின்பற்றி வீட்டில் பாதுகாப்பாக இருங்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.