பிரபல நடிகர் விஷால் திருப்பதியில் உள்ள 2 கல்லூரிகளில் நடைபெற்ற லத்தி படத்தின் ஃப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, என்னைப் பற்றி நிறைய வதந்திகள் வருகிறது. ஜெகன்மோகன் ரெட்டி பாதயாத்திரை மேற்கொண்ட போது ஒரு வருடத்திற்கு முன்பாகவே அவர் தான் ஜெயிப்பார் என்று கூறியவன். நான் அவரை சாதாரணமாக சந்தித்து பேசியதற்காக என்னை குப்பம் தொகுதியில் போட்டியிடப் போகிறார்கள் என்று கூறுகிறார்கள். சமூக சேவை செய்பவர்கள் எல்லோருமே அரசியல்வாதிகள் தான்.
அதன் பிறகு எனக்கு சந்திரபாபு நாயுடுவை எதிர்த்து குப்பம் தொகுதியில் போட்டியிடும் எண்ணம் இல்லை. ஒரு எம்எல்ஏ எவ்வளவு சம்பாதிக்கிறாரோ அதைவிட அதிகமாக நான் படங்களில் சம்பாதிக்கிறேன். ஒரு எம்எல்ஏவுக்கு இருக்கும் பெயர் மற்றும் புகழை விட எனக்கு அதிக அளவில் பெயரும், புகழும் இருக்கிறது. எனவே தற்போதைக்கு எனக்கு அரசியல் ஈடுபடும் எந்த ஒரு எண்ணமும் கிடையாது என்று கூறினார். மேலும் நடிகர் விஷால் பேசியது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.