பிரபல வில்லன் நடிகர் முன்னணி நடிகர் விஜய் சேதுபதியை புகழ்ந்து கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவில் வெளியான வேதாளம், றெக்க, காஞ்சனா3, அருவம் உள்ளிட்ட படங்களில் வில்லனாக நடித்து பிரபலமானவர் நடிகர் கபீர் சிங். இவர் தற்போது ஹிந்தி படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். சமீபத்தில் இவர் தன் திரைப் பயணத்தை பற்றி கூறும்போது தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர நாயகனாக வலம் வரும் விஜய் சேதுபதியை பற்றி கூறியுள்ளார்.
அப்போது அவர் கூறியதாவது, விஜய் சேதுபதியுடன் நடிக்க கிடைத்த வாய்ப்பை நான் அதிர்ஷ்டமாக எண்ணுகிறேன். மேலும் அவருடன் நடிப்பது நடிப்பு பள்ளிக்குப் போவது போல இருக்கிறது என்று புகழ்ந்து கூறியுள்ளார்.