Categories
தேசிய செய்திகள்

இப்பொழுது பீகார் மக்களுக்கு புரியும் “நியாய்’ திட்டத்தின் அருமை” – பா.சிதம்பரம்..!!

காங்கிரஸ் மூத்த தலைவர் பா.சிதம்பரம், நியாய்’ திட்டத்தின் அருமை (மாதம் ரூ 6000) இப்பொழுது பீகார் மக்களுக்குப் புரிந்திருக்கும் என்று கருதுகிறேன்” என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். 

பீகார் மாநிலத்தில் உள்ள முசாபர்பூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு குழந்தைகளுக்கு மூளை காய்ச்சல் இருப்பதாக கண்டறியப்பட்டு,முசாபர்பூரில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா அரசு மருத்துவ கல்லூரி மற்றும் கெஜ்ரிவால் மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுவரையில் மூளைகாய்ச்சல் பாதிப்பால் 141 குழந்தைகள் பலியாகியுள்ளது.  அக்யூட் என்சபிலிட்டிஸ் சிண்ட்ரோம்’ மற்றும் ‘ஜப்பான் என்சபிலிட்டிஸ்’ என 2 வகையான மூளைக்காய்ச்சல் பரவி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Seithi Solai

இக்காய்ச்சலால் பீகாரில் 18 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து நிலைமையை ஆராய மத்திய நிபுணர் குழு அனுப்பி வைக்கப்பட்டு, பல்வேறு இடங்களுக்கு சென்று ஆய்வு நடத்துவதுடன் சிகிச்சைகளும் மேற்கொண்டு வருகிறார்கள். மூளை காய்ச்சலால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை காப்பாற்ற மாநில அரசு தன்னால் முடிந்த அனைத்தையும் செய்து வருவதாக பீகார் சுகாதார அமைச்சர் மங்கல் பாண்டே சனிக்கிழமை தெரிவித்தார்.

Related image

இந்நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர் பா.சிதம்பரம், நியாய்’ திட்டத்தின் அருமை (மாதம் ரூ 6000) இப்பொழுது பீகார் மக்களுக்குப் புரிந்திருக்கும் என்று கருதுகிறேன்” என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

Categories

Tech |