Categories
கிரிக்கெட் விளையாட்டு

இந்திய அணியில் இல்லாதது எனக்கு கஷ்டமா இருக்கு… பிசிசிஐ அனுமதித்தால் நான் விளையாடுவேன்… நடராஜன் பேட்டி …!

கடந்த ஆறு மாதங்களாக தொடர்ச்சியாக விளையாடிய நடராஜனை ஓய்வு எடுக்கச் சொல்லி பிசிசிஐ அறிவுறுத்தியுள்ளது.

தமிழகத்தைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் நடராஜன் பிசிசிஐ அனுமதி அளித்தால் விஜய் ஹசாரே ஒருநாள் போட்டியில் நிச்சயமாக விளையாடுவேன் என்று தெரிவித்துள்ளார். மேலும் சையத் முஷ்டாக் அலி போட்டியில் விளையாட வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார். ஆனால் பிசிசிஐ கடந்த ஆறு மாதங்களாக தொடர்ச்சியாக விளையாடிய நடராஜனை ஓய்வு எடுக்கச் சொல்லி அறிவுறுத்தியுள்ளனர்.

மேலும் இதுகுறித்து நடராஜன் தெரிவித்ததாவது, சென்னை டெஸ்டுகளில் இந்திய அணியில் நான் இடம்பெறவில்லை. கடந்த சில மாதங்களாக அணி உடனே இருந்து விட்டு இப்போது இல்லாதது எனக்கு மிகவும் கஷ்டமாக இருக்கிறது. ஆனால் எனக்கு ஒரு இடை வெளி தேவைப் படுவதை நான் புரிந்துகொள்கிறேன்.

ஏனென்றால் கடந்த ஆறு மாதங்களாக நான் என் குடும்பத்தையும், குழந்தையையும் பார்க்கவில்லை. எனவே பிசிசிஐயின் இந்த முடிவுக்கு நான் சம்மதம் தெரிவிக்கிறேன். சென்னைக்கு வந்து நான் என் பயிற்சியை தொடங்குவேன். ஏனென்றால் மூன்று வகை போட்டிகளில் விளையாட நான் உடற்தகுதி பெற வேண்டும். அதனால் என் கவனம் தற்போது உடற்தகுதியில் உள்ளது என்று கூறியுள்ளார்.

Categories

Tech |