கொரோனா தடுப்பு பணிகளுக்கு தனது முழு ஆதரவையும் தருவேன் என முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உறுதியளித்துள்ளார்.
தமிழகத்தில் கடந்த மாதம் முதலே கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. தமிழகத்தில் மே 10ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் தமிழகத்தில் ஊரடங்கு மேலும் கடுமையாகபடுவதாகவும் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தெரிவித்திருந்தார். மக்கள் யாரும் தேவையில்லாமல் வீட்டைவிட்டு வெளியில் வருவதை தவிர்க்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்நிலையில் கொரோனா தடுப்பு பணிகளுக்கு அமைக்கப்பட்டுள்ள 15 பேர் கொண்ட சட்ட மன்ற குழுவில் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இடம்பெற்றுள்ளார். இந்நிலையில் அவர் கொரோனா தடுப்பு குழுவிற்கு நான் முழு ஆதரவையும் தருவேன். கொரோனா முதல் அலையில் இருந்து கற்றுக்கொண்ட பாடங்களை பயன்படுத்தி கொரோனா பரவலைத் அடுத்து தமிழகம் சந்திக்கும் கடின நிலையை மாற்றுவோம்” என்று அவர் உறுதி கூறியிருந்தார்.