Categories
உலக செய்திகள்

நான் ரெண்டாவது ஊசி போட்டுகிட்டேன்… நீங்களும் போட்டுக்கோங்க… அமெரிக்க துணை அதிபர் ட்வீட்..!

அமெரிக்காவின் துணை அதிபர் தனது இரண்டாவது கட்ட கொரானா தடுப்பூசி போட்டுக் கொண்டாஎர்.

உலக நாடுகளிலேயே கொரோனாவால் அதிக பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. தற்போது தடுப்பூசி செலுத்தும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அமெரிக்காவின் புதிய அதிபராக பதவியேற்றுள்ள ஜோ பைடன் 100 நாட்கள் 100 மில்லியன் பேருக்கு தடுப்பு ஊசி செலுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் துணை அதிபர் கமலா ஹாரிஸ் கடந்த 29ஆம் தேதி கொரோனாவின் முதல் கட்ட தடுப்பூசி போட்டுக் கொண்ட நிலையில் நேற்று அவர் இரண்டாம் கட்ட தடுப்பூசி போட்டுக் கொண்டார்.இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது, கொரோனாவிற்கான இரண்டாவது டோசை நான் எடுத்துக் கொண்டேன். நீங்களும் போட்டுக் கொள்ளுங்கள்.மேலும் இது பாதுகாப்பானது, எளிமைனது, உயிர்களை காப்பாற்ற கூடியது என்று பதிவிட்டுள்ளார்.

Categories

Tech |