Categories
கிரிக்கெட் விளையாட்டு

”நீ எல்லாம் ஒரு குழந்தை டா”….. பும்ராவை சீண்டும் பாக் வீரர் ….!!

இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் பும்ராவை தன்னால் எளிதாக எதிர்கொள்ள முடியும் என்று பாகிஸ்தான் அணியின் முன்னாள் ஆல்-ரவுண்டரான அப்துல் ரசாக் தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளரான பும்ரா டெஸ்ட், ஒருநாள், டி20 என அனைத்துவிதமான ஃபார்மெட்டுகளிலும் கலக்கிவருகிறார். எவ்வளவு பெரிய பேட்ஸ்மேனாக இருந்தாலும் இவரது துல்லியமான பந்துவீச்சை எதிர்கொள்வது என்பது சற்று கடினமாகவே உள்ளது. ஒருநாள் பந்துவீச்சாளர் தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் பும்ரா தற்போது காயம் காரணமாக ஓய்வில் உள்ளார். இவர் சமீபத்தில் தனது பயிற்சியை தொடங்கினார்.

இதனிடையே பாகிஸ்தான் அணியின் முன்னாள் ஆல்-ரவுண்டரான அப்துல் ரசாக் பும்ரா குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறியாதாவது, நான் கிரிக்கெட் ஆடிய சமயத்தில் உலகின் தலைசிறந்த பவுலர்களான ஆஸ்திரேலியாவின் கிளன் மெக்ராத், சகநாட்டு வீரர் வாசிம் அக்ரம் ஆகியோரின் பந்துவீச்சை எதிர்கொண்டுள்ளேன்.

எனவே பும்ராவின் பந்துவீச்சை எதிர்கொள்வது என்பது எனக்கு கடினமான விஷயமாக இருக்காது. அவரது பந்தை என்னால் எளிதாக அடிக்க முடியும். உலகின் தலைசிறந்த பந்துவீச்சை எதிர்கொண்ட எனக்கு பும்ரா ஒரு குழந்தைபோன்றே தெரிகிறார். அவரை எதிர்த்து விளையாடுவதில் எனக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. அவருக்குதான் அது கடினமான விஷயமாக இருக்கும் என்று தெரிவித்தார்.

மேலும் மிகச்சிறப்பாக பந்துவீசி வரும் பும்ரா பலவற்றில் முன்னேற்றம் கண்டுள்ளார். அவரது பந்துவீசும் ஸ்டைல் மோசமாக இருந்தாலும் துல்லியமான பந்துவீச்சால் அவர் பலமுள்ளவராக இருக்கிறார் என்றார்.

Categories

Tech |