Categories
தேசிய செய்திகள்

எனக்கு கொரோனா இருக்கலாம்…… தன்னை தானே…… தனிமை படுத்த பிஜேபி MP முடிவு…..!!

சவுதி அரேபியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பாஜக எம்பி சுரேஷ்பிரபு தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டு கொரோனோவுக்கான சிகிச்சை மேற்கொண்டு வருகிறார்.

பாஜக எம்பி சுரேஷ் பிரபு அண்மையில் சவுதி அரேபியா சென்று வந்திருந்தார். உலகம் முழுவதும் கொரோனோ வைரஸ் தாக்கம் இருப்பதால் அங்கு சென்று வந்த தனக்கும் பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என்று நினைத்து தன்னால் மற்றவருக்கு எந்த பாதிப்பும் ஏற்படக்கூடாது என்பதற்காக தன்னைத்தானே தனிமைப் படுத்திக் கொண்டு தீவிர சிகிச்சை மேற்கொண்டு வருகிறார்.

ஏற்கனவே மத்திய அமைச்சர் முரளிதரன் கேரள மாநிலத்தில் பொதுக் கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டபோது அவர் அருகில் அமர்ந்திருந்த மருத்துவர் ஒருவருக்கு கொரோனோ வைரஸ் நோய் இருப்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து அவர் தன்னை தனிமைப்படுத்தி சிகிச்சை மேற்கொண்டு பின் கொரோனோ உறுதி செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |