அஜித்துடன் நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை என பிரபல நடிகர் வருத்தமாக பேசியுள்ளார்.
நடிகர் அஜித் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருகிறார். இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது. மேலும், தல அஜித்துடன் ஒரு காட்சியிலாவது நடித்து விட வேண்டும் என நடிகர் மற்றும் நடிகைகளுக்கு ஒரு ஆசை இருக்கும்.
அந்தவகையில்,” 215 படங்களில் நடித்துள்ளேன். ஆனால், ஒரு படத்தில் கூட அஜீத்துடன் சேர்ந்து நடிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைக்கவில்லை என பிரபல நடிகரான ‘மீசை ராஜேந்திரன்’ கூறியுள்ளார்”. மேலும் திருப்பதி படத்தில் அவருடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு கிடைத்ததாகவும் அப்போது அவர் தெலுங்கு படமொன்றில் பிஸியாக இருந்ததால் அதனால் அந்தப் படத்தில் நடிக்க முடியாமல் போய்விட்டதாகவும் அவர் தெரிவித்தார்.