Categories
சினிமா தமிழ் சினிமா

“என்கிட்ட மொத்த ஆதாரமும் இருக்கு”….. தமிழக அரசு கேட்டா கொடுக்க தயார்….. நடிகர் விஷால் அதிரடி…..!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருக்கும் விஷால் தற்போது லத்தி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படம் டிசம்பர் 22-ஆம் தேதி திரையரங்களில் ரிலீஸ் ஆகும் நிலையில், படத்தின் ப்ரமோஷனுக்காக நடிகர் விஷால் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி கொடுத்துள்ளார். அவர் பேசியதாவது, தமிழ்நாட்டில் 2,30,000 போலீஸ் கான்ஸ்டபிள்கள் இருக்கிறார்கள். வழக்கமாக போலீஸ் உயர் அதிகாரிகளின் சாகசங்கள் மட்டுமே படங்களில் காண்பிக்கப்படும் நிலையில், தற்போது லத்தி படத்தில் கான்ஸ்டபில்கள் சந்திக்கும் பிரச்சனைகள், அவர்கள் செய்யும் பணிகள் போன்றவைகள் காண்பிக்கப்பட்டுள்ளது.

இதனால் இந்த படத்தை அனைத்து காவலர்களுக்கும்  நான் போட்டு காண்பிக்க முடிவு செய்துள்ள நிலையில், பல நகரங்களில் அதற்கான அனுமதியும் கிடைத்துள்ளது. நான் நடித்த படங்களில் லத்தி படம் தான் அதிக பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட திரைப்படம். பொதுவாக எல்லா படங்களும் பைரசி பிரச்சனையை சந்திப்பது போன்று இந்த படமும் சந்திக்கும். தமிழக அரசு நினைத்தால் கண்டிப்பாக பைரசி பிரச்சனையை ஒழிக்க முடியும்.

என்னிடம் பைரசி செய்பவர்களின் வீட்டு முகவரி, குடும்ப போட்டோ உள்ளிட்ட அனைத்து புள்ளி விவரங்களும் இருக்கிறது. தமிழக அரசு கேட்டால் அதைக் கொடுக்க நான் தயாராக இருக்கிறேன். ஆபாச தளங்களை தடை செய்யும்போது பைரசி தளங்களையும் தடை செய்ய முடியாதா..? மேலும் என்னுடைய கனவு படத்தை விரைவில் எடுப்பதோடு, நடிகர் விஜயை வைத்தும் கண்டிப்பாக ஒரு படத்தை இயக்குவேன் என்று கூறியுள்ளார்

Categories

Tech |