ஸ்ரீ ரெட்டியின் பேச்சு இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நடிகை ஸ்ரீ ரெட்டி பல இயக்குனர்கள் மற்றும் நடிகர்கள் மீது தொடர்ந்து புகார் கொடுத்து பரபரப்பை கிளப்பி வருவார். பட வாய்ப்புகள் தருவதாக கூறி பல நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் தன்னை ஏமாற்றி விட்டதாக இவர் ஊடகங்கள் முன்னிலையில் நிறைய புகார் கொடுத்து இருக்கிறார்.
இவர் இயக்குனர் ஏ. ஆர். முருகதாஸ், ராகவா லாரன்ஸ், ஸ்ரீகாந்த், விஷால் ஆகியோர் மீது புகார்கள் தெரிவித்தார். இவர் விளம்பரத்திற்காக இப்படி செய்வதாக பலர் கூறினர். இந்நிலையில், ஸ்ரீ ரெட்டி அளித்த சமீபத்திய பேட்டியில், ”என் அம்மா, அப்பா, தம்பி என யாரும் தன்னிடம் பேசுவதில்லை எனவும், நான் 25 பேர் கிட்ட ஏமாந்திருக்கேன். அவர்கள் அனைவரும் சினிமாவில் பெரிய இயக்குனர்கள், நடிகர்கள், தயாரிப்பாளர்கள்” எனவும் கூறியுள்ளார். இவரின் இந்த பேச்சு இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.