நாகலாந்து சேர்ந்த 3 வயது சிறுமி தனக்கு சளி பிரச்சனை இருந்ததற்காக சுகாதார நிலையத்திற்கு தனியாளாக வந்த சம்பவம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாகலாந்தை சேர்ந்த 3 வயது சிறுமி லிபாவி. இவரது பெற்றோர்கள் விவசாயிகள். சம்பவம் நடந்த தினத்தன்று இவரது தந்தை மற்றும் தாய் இருவரும் வேலைக்கு சென்றுள்ளனர். இவருக்கு சளி பிரச்சனை இருந்தால் முக கவசம் அணிந்து அந்த சிறுமி சுகாதார மையத்திற்கு அவரே நடந்து வந்துள்ளார். இதை பார்த்த மருத்துவர்கள் ஆச்சரியம் அடைந்தனர். இதுதொடர்பான புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இது குறித்து பாஜக தலைவர் பெஞ்சமின் கூறியுள்ளதாவது: “3 வயது சிறுமியின் இந்த செயலை பார்க்கும் போது ஆச்சரியமாக உள்ளது. இந்த நேரத்தில் பெரியவர்களே தங்களை பரிசோதனை செய்து கொள்வதற்கு மருத்துவமனைக்கு வர தயக்கம் காட்டும் நிலையில், லிபாவாவின் அப்பாவித்தனம் பிறருக்கும் முன்னுதாரணமாக இருக்கிறது. அவரை கடவுள் ஆசீர்வதிக்கட்டும்” என்று கூறியுள்ளார்.