வடமாநிலங்களில் வரிசையாக நிலநடுக்கங்கள் வருவதால் மக்கள் பீதியடைந்துள்ளனர்.
உத்தரகாண்ட் மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் 40 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. மாலை 4.38 மணிக்கு ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் செய்தி வெளியிட்டுள்ளது. தரையிலிருந்து 8 கிலோ மீட்டர் ஆழத்திற்கு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதில் எந்தவொரு உயிர் சேதமோ, பொருட் சேதமோ ஏற்படவில்லை. ஏற்கனவே உத்தரகாண்டில் பனிப்பாறை வெடிப்பின் காரணமாக பெரும் சேதம் ஏற்பட்டது. ஒரு வாரத்திற்கு முன்பு டெல்லி, நொய்டா, குருகிராம், காஸியாபாத் ஆகிய பகுதிகளிலும் பலமான நில அதிர்வு உணரப்பட்டது. இதனால் பொதுமக்கள் பீதியடைந்து தங்களுடைய வீடுகளுக்குள் முடங்கிக் கிடக்கின்றனர்.
இதேபோல கடந்த வாரம் ராஜஸ்தான் மாநிலம் பிகனெர் பகுதியில் 4.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கமும், அசாம் மாநிலம் டெஸ்பூர் அருகே 4.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதன் அதிர்வுகள் அசாம் தலைநகர் கவுகாத்தியில் உணரப்பட்டதாக செய்தி வெளியானது. இவ்வாறு தொடர் நிலநடுக்கம் ஏற்படுவது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக மிசோராம், மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் தொடர் நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றன. வடகிழக்கு மாநிலங்களான இவற்றில் அடிக்கடி நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருகின்றன.