தந்தை ஆரம்பித்த கட்சிக்கும், தனக்கு எந்த சம்மந்தமும் கிடையாது என நடிகர் விஜய் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
சில மணி நேரங்களுக்கு முன்பாக விஜய் பெயரில் ஒரு கட்சி பதிவாகியுள்ளது என அவரின் தந்தை எஸ்.ஏ சந்திரசேகர் தெரிவித்தார். இதை தொடர்ந்து நடிகர் விஜய் ஒரு அறிக்கை வெளியிட்டு இருக்கிறார். அதில் தன்னுடைய தந்தை தொடங்கியிருக்கும் கட்சிக்கும், எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. இதை ஊடகங்கள் வாயிலாக அறிந்தேன். இந்த கட்சிக்கும், எனக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. அந்த அவர்கள் செயல்படுத்தக்கூடிய எந்த விஷயமும் நம்மை கட்டுப்படுத்தாது என்று குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பாக தன்னுடைய ரசிகர்களுக்கு ஒரு விஷயத்தை கூறியிருக்கிறார். தன்னுடைய தந்தை தொடங்கி இருக்கக்கூடிய கட்சிக்கும் கட்சி என்னுடையது என்று யாரும் நினைக்க வேண்டாம். என்ற ஒரு மிக முக்கியமான ஒரு விஷயத்தை விஜய் குறிப்பிட்டுள்ளார். இந்த கட்சிக்கும் நமக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது.அதே போல தன்னுடைய புகைப்படத்தையோ, பெயரையோ அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் பெயரை தொடர்புபடுத்தி எங்கும் விவகாரங்களில் ஈடுபட்டால் அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்திருக்கிறார்