Categories
உலக செய்திகள்

இதுக்கு” எனக்கு” சம்பந்தமில்ல… “இவங்க பொய் சொல்றாங்க”… நீதிமன்றத்தில் கதறி அழுத குற்றவாளி…!

சுற்றுலா பயணியை கடத்தி கொடூரமாக கொன்ற நபர் ஒருவருக்கு நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்துள்ளது.

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த மலைஏறுபவரான 55 வயதுடைய ஹெர்வ் கௌர்டெல் என்பவர் கடந்த 2014 ஆம் அல்ஜீரியாவுக்கு சுற்றுலா பயணம் சென்றிருந்தார். அப்போது அவர் மர்ம நபர்களால் கடத்தப்பட்டார். அவரை கடத்திய கடத்தல்காரர்கள் ஹெர்வை விடுவிக்க வேண்டும் என்றால் ஈராக் மற்றும் சிரியாவில் ஐ.எஸ்-க்கு எதிராக பிரான்ஸ் நடத்தும் விண்வெளி தாக்குதல்களை நிறுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

ஆனால் பிரான்ஸ் அரசாங்கம் அவர்களின் கோரிக்கையை ஏற்காததால் ஹெர்வ் கௌர்டெலின்  தலையை துண்டித்து கொடூரமாக கொன்று அந்த வீடியோவை இணையத்தில் வெளியிட்டனர். அதன் பிறகு இவரது படுகொலைக்கு ஐ.எஸ் அமைப்பு பொறுப்பேற்றது. இந்நிலையில் படுகொலைக்கு சம்பந்தப்பட்ட ஒரு நபர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். மற்றவர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

அதன் பிறகு நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்ட அப்தெல்மேலெக் ஹம்ஸாவி என்பவருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கபட்டது. ஹம்ஸாவி, நீதிமன்றத்தில் தனக்கு இந்த கொலையில் தொடர்பு இல்லை என்றும் இந்த வழக்கை முடிக்க தன் மீது குற்றம் சாட்டுவதாகவும் கதறி அழுது வாதிட்டார். ஆனால் அல்ஜீரியாவில் 1993 முதல் மரண தண்டனை விதிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |