கடந்த இரண்டு மாதங்களாக அதிமுகவில் தொடர் குழப்பங்கள், அதிகார போட்டிக்கு எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ.பன்னீர் செல்வமும் மோதிக்கொண்டிருந்த நிலையில், பல சச்சரவுக்கு நடுவிலேவில் நடந்த பொதுக் குழுவில் எடப்பாடி பழனிச்சாமி இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். இதை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் உயர்நீதிமன்ற, உச்ச நீதிமன்றம் என்று வழக்கு தொடரப்பட்ட நிலையில்,
உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதலில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று, நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த தீர்ப்பில் அதிமுக சார்பில் நடைபெற்ற பொதுக்குழு செல்லாது என்று, ஒருங்கிணைப்பாளரும் – இணை ஒருங்கிணைப்பாளரும் இணைந்து அனைத்து நடவடிக்கையும் மேற்கொள்ள வேண்டும் என்றும் பொதுக்குழுவுக்கு முன்னாள் இருந்த நிலையே தற்போதும் தொடரும் என தீர்ப்பு வழங்கியது.
இந்த தீர்ப்பு எடப்பாடி தரப்புக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தினாலும், ஓபிஎஸ் தரப்புக்கு மிகுந்த மகிழ்ச்சி ஏற்படுத்தி, ஆரவாரமாக பட்டாசு வெடித்துக் கொண்டாடியது. பின்னர் ஜெயலலிதா எம்ஜிஆர் சமாதிக்கு சென்று மரியாதை செய்துவிட்டு, பத்திரிகையாளரை சந்தித்தார். அப்போது பத்திரிக்கையாளர் அடுத்தடுத்து கேள்விகளை கேட்டுக் கொண்டிருக்கவும், எனக்கு ரெண்டு காது தான் இருக்கு; ஒருத்தர் ஒருத்தரா கேளுங்க என மிகவும் மகிழ்ச்சியாக, நகைச்சுவையுடன் பேசினார்.