நீட் தேர்வு ஆள்மாறாட்டம் செய்ய 15 லட்சம் கமிஷன் இடைத்தரகருக்கு கொடுத்தத்த்தாக மாணவர் தனுஷ் குமார் தந்தை தெய்வேந்திரன் தெரிவித்துள்ளார்.
கடந்த 2018ல் மருத்துவ படிப்பில் சேர்ந்த தனுஷ் குமார் என்ற மாணவர் பீகாரில் இந்தி மொழியில் நீட் தேர்வு எழுதியுள்ளார். இந்தி தெரியாத மாணவர் பீகாரில் நீட்தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றதையடுத்து சந்தேகம் அடைந்த கல்லூரி முதலவர் பூக்கடை காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இதையடுத்து மோசடி , கூட்டுசதி ஆகிய பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்
இந்த வழக்கு விசாரணை சிபிசிஐடி மாற்றப்பட்டத்தை தொடர்ந்து சிபிசிஐடி போலீசார் இது தொடர்பாக விசாரணை நடத்திய போது மாணவர் தனுஷ் குமார் முறைகேடு செய்திருப்பது விசாரணையில் தெரியவந்தது. மாணவனை பிடித்ததற்கான சிபிசிஐடி போலீசார் ஓசூர் சென்றார்கள். இதையடுத்து அவரின் தந்தை தெய்வேந்திரன் இரண்டு பேரிடமும் சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தினார்கள். இரவு முழுவதும் நடத்தப்பட்ட விசாரணையில் தற்போது அவர்களை சிபிசிஐடி போலீசார் கைது செய்கிறார்கள்.
இருவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. அதில் 2018 ஆம் ஆண்டு தனுஷ் குமாருக்கு பதிலாக பீகாரில் வேறொருவர் தேர்வு எழுதி இருக்கிறார். இந்தி தெரியாத காரணத்தினால் இவர் தேர்வு ஆள்மாறாட்டம் செய்து இந்த தேர்வை எழுதியதாகவும் , பெங்களூரில் இருக்கக்கூடிய ஒரு தனியார் பயிற்சி மையத்தில் இடைத்தரகர் மூலம் 15 லட்ச ரூபாய் கமிஷனாக கொடுத்தாக விசாரணையில் தெரியவந்திருக்கிறது.
தற்போது அந்த இடைத்தரகர் யார் பெங்களூரிலிருந்து கூடிய பயிற்சி மையம் எது என்பது தொடர்பான விசாரணை நடந்துகொண்டிருக்கிறது. மேலும் 2018 ஆம் ஆண்டு மருத்துவ தேர்வில் வெற்றி பெற்று இருக்கக் கூடிய 2500 மருத்துவ மாணவர்களை பட்டியலையும் ஆய்வு செய்யவும் படி மருத்துவ இயக்குனருக்கு சிபிசிஐடி போலீசார் ஒரு பரிந்துரை செய்துள்ளனர்.