தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ரகுல் ப்ரீத் சிங். இவர் தமிழில் தீரன் அதிகாரம் ஒன்று என்று என்ஜிகே உள்ளிட்ட படங்களில் பல படங்களில் நடித்துள்ளார். இவர் தற்போது உலகநாயகன் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து வருவதோடு சிவா நடிப்பில் ரிலீசுக்கு காத்திருக்கும் அயலான் திரைப்படத்திலும் நடித்துள்ளார்.
இவர் பாலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகராக இருக்கும் ஜாக்கி பக்னாணியை காதலித்து வருகிறார். இந்த தகவலை நடிகை ரகுல் ப்ரீத் சிங் உறுதிப்படுத்திய நிலையில், அவரின் சகோதரர் 2023-ம் ஆண்டு திருமணம் குறித்து அறிவிப்பு வெளியாகும் என்று கூறியுள்ளார். இந்நிலையில் பாலிவுட் சினிமாவில் ஒரு படப்பிடிப்பில் நடிகை ரகுல் பிரீத் சிங் கலந்து கொண்டார்.
அப்போது ரசிகர்கள் உங்களுக்கு எப்போது திருமணம் என்று கேள்வி எழுப்பினர். அதற்கு நடிகை ரகுல் என்னுடைய பெற்றோர்களும் இதையேதான் கேட்கிறார்கள். நான் அவர்களிடம் தான் கேட்க வேண்டும் என்று கூறினார். மேலும் நடிகர் ஜாக்கி பக்னானி தமிழில் வெளியான மோகினி திரைப்படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.