நாமக்கல் மாவட்டத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த சரக்கு வாகன டிரைவர் மீது வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
திருச்சி மாவட்டம் எம்.புத்தூர் பகுதியில் குணசீலன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரின் சரக்கு வாகனத்தில் டிரைவராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் குணசீலன் நேற்று இருசக்கர வாகனத்தில் நாமக்கலுக்கு சென்றுள்ளார். அப்போது நாமக்கல் நல்லூர் பகுதியில் சென்றுகொண்டிருக்கும்போது நாமக்கலில் இருந்து திருச்சி நோக்கி சென்ற காருடன் ஒன்றுடன் ஓன்று மோதியுள்ளது.
இந்த விபத்தில் குணசீலம் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதனையறிந்து வந்த நாமக்கல் காவல்துறையினர் குணசீலனின் உடலை மீட்டு உடற்கூராவிற்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் காரை ஒட்டு வந்த டிரைவர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.