Categories
உலக செய்திகள்

பறவை சத்தத்தைக் கேட்டு பின்னால் சென்றேன்… அபூர்வ காட்சியை கண்டு அசந்து நின்றேன்…ஆச்சரியத்தில் மூழ்கிய கனேடியர்…!

கனடாவில் பறவை சத்தத்தைக் கேட்டு பின்னால் சென்றவர் வேறொரு காட்சியை பார்த்து ஆச்சரியத்தில் மூழ்கினார்.

கனடாவிலுள்ள நோவா ஸ்கோஷியாவில் வசிப்பவர் பில் ஜில் என்பவர். இவர் ஒரு நாள் அவரது வீட்டுத் தோட்டத்தில் இரண்டு பறவைகள் சத்தத்தை கேட்டுள்ளார். சத்தம் கேட்ட பக்கத்தை நோக்கி சென்றபோது அவர் அங்கு ஒரு அதிசயக் காட்சியைக் கண்டார். அவர் அங்கே இரண்டு தலைகள் உள்ள கௌதாரி இரை மேய்ந்து கொண்டிருப்பதை பார்த்தார். ஒரு உடலில் இரு தலைகள் இரை உண்பதை கண்ட அவர் ஆச்சர்யத்தில் மூழ்கினார்.

அவரது வீட்டிற்கு இந்த கௌதாரி இரண்டு முறை வந்துள்ளது என்று கூறியுள்ளார். இது குறித்து பேராசிரியர் லெஸ்லி மேக்லாரன் கூறியதாவது, இரண்டு தலையை கொண்ட விலங்குகள் சாத்தியமே. அது அபூர்வமான விஷயமே என்றாலும் நம்ப முடியாதது அல்ல. இரண்டு தலை பாம்புகள், இரண்டு தலை பூனைகள் ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவைகள் ஒட்டிப்பிறந்த இரட்டையர்களாக இருக்கலாம் என்று கூறியுள்ளார்.

Categories

Tech |